யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஆன் பிளைத் நிம்மி சவுந்தரநாயகம் அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வில்லியம் சவுந்தரநாயகம் - லூர்த்து மலர் (ராசமுத்து) தம்பதியினரின் அன்பு மகளும்,
மேரி குயீன் பிளவர் (ஜிக்கி), காலஞ்சென்ற வில்லியம் ராஜா, பிளண்டீனா ஜோசெப்பீன் (கௌரி), றேபேக்கா மறிஸ்ரேலா வினிசி, எட்வின் ராஜா (குமார்), கேமன் யோகராஜா, சேலி பிறியிற் (கீதா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 24-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 26-12-2024 வியாழக்கிழமை அன்று இல-465, மாதகல் பிரதான வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புனித தோமையார் சேமக்காலையில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
தெலஸ்போர் (மைத்துனர்):- +33 650 269 311
Aloysious Jesuthsan (மைத்துனர்):- +47 41 20 04 37
Henry Paviluppillai (மைத்துனர்):- +61 402 223 595
Niranjane Rajakoone (மைத்துனர்):- +1 510 468 7593
கருத்துரையிடுக