கடந்த பல ஆண்டுகளாக மாதகல் கிராமத்தினதும் மக்களினதும் மேம்பாடு கருதி மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையில் கனடா மாதகல் நலம்புரி முன்னேற்ற ஒன்றியம் பாரிய நிதியீட்டத்தை வழங்கியிருக்கும் நிலையில் தாய் தந்தை அற்ற பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்கான நிதி, யா/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்திற்கான போட்டோ பிரதியாக்கல் இயந்திரத்திற்கான நிதி, மாதகல் கிழக்கு நீர் பாவனையாளர் சங்கத்திற்கு பாதை செப்பனிடலுக்கான நிதியுமாக மொத்தம் ரூபா 813000/=வினை வழங்கியுள்ளது.
குறித்த நிதி 24/11/2024 ஆம் திகதி மாதகலில் நடைபெற்ற ஏழாவது வருடத்தின் பசுமையில் மாதகல் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வில் வைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் தாய் தந்தை அற்ற பிள்ளைகளின் கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கல் கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் வருடாந்த தொடர் செயற்திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 24/11/2024 ஆம் திகதி நடைபெற்ற பசுமையில் மாதகல் நிகழ்வில் கனடா மாதகல் நலம்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் செயற்பாடுகளும் இவ் ஒன்றியத்தின் செயற்பாடுகளில் வெளிநாடுகளில் வசிக்கும் மாதகல் கிராம மக்களின் நிதிப் பங்களிப்பும் அளப்பரியது என்பதுடன் ஒன்றியத்தின் கடந்த கால செயற்பாடுகளும் மாதகல் நலன்புரிச் சங்க தலைவர், செயலாளரினால் வெளிப்படுத்தப்பட்டதும் சிறப்பம்சமாகும்.
(நிதி வழங்கல் விவரம்)
தாய் தந்தையற்ற பிள்ளைகளுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு (05 பிள்ளைகள் ×60000/= வீதம் ) - 300000/=
யா/ மாதகல் சென் ஜோசப் மகாவித்தியால போட்டோ பிரதியாக்கள் இயந்திரம்- 413000/=
மாதகல் கிழக்கு நீர்ப் பாவனையாளர் சங்கம் பாதை செப்பனிடல்.- 100000/=
மொத்தம் 813000/=
கருத்துரையிடுக