- ஞாயிறு 24-11-2024
பிரதேச வைத்தியசாலையின் நிரந்தர பெயர்ப்பலகை பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு குகரவீந்திரநாதன் [றவி] அவர்களால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு சிற்றம்பலம் அவர்களும், செயலாளர் திரு ஜெறாட் அவர்களும், நிர்வாக உறுப்பினர் திரு அனுஷன்
அவர்களும் , இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு அருள்ஞாணாணந்தன் அவர்களும், கணக்காளர் திரு சுபாஸ்கரன் அவர்களும், பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவர் Dr P. சுதாகரன் [D.M.O.] அவர்களும், சமூக சேவகன் திரு அன்பழகன் [ஜேர்மனி] அவர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று எமது நிர்வாகத்தினரின் ஏகோபித்த முடிவுடன், இதற்குரிய செலவாக இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாவினை 11-02-2023 அன்று வங்கி மூலம் அனுப்பி வைத்தது.
கருத்துரையிடுக