மாதகல் புனித தோமையார் இளையோர் ஒன்றியத்தினராகிய எம்மால் சிறுவர் தினம் 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை தூய லூர்து அன்னை திருத்தலத்தில் கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் இயக்குனர் தந்தை மதிப்பிற்குரிய அருட்பணி ஜேசுதாசன் அடிகளார், எம் ஒன்றியத்தின் போசகரும் பங்குத்தந்தையுமான அருட்பணி றோய் பேடினன்ட் அடிகளார், அன்பு கன்னியர் இல்ல அருட்சகோதரிகளான அருட்சகோதரி யோகராணி மற்றும் அருட்சகோதரி றோஸ்மேரி, மாதகல் புனித தோமையார் ஆலய அருட்பணி சபை செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோருடன் சிறார்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சிறார்களுக்கான விளையாட்டுக்களும் நடைபெற்று பரிசில்களும் வழங்கப்பட்டன.
முதியோர் தினத்தை முன்னிட்டு மாதகல் புனித தோமையார் இளையோர் ஒன்றியத்தினால் 06.10.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முதியோரை சந்தித்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்ற பொழுது.
கருத்துரையிடுக