பிரான்ஸ் வாழ் மாதகல் மக்களிற்கு முக்கிய அறிவித்தல் :
பிரான்ஸ் நாட்டில் மர்லி லு றுவா எனும் நகரத்தில் இயங்கும் "இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக்கூடத்தினால்" 6ஆவது வருடாந்த நிகழ்வாக நடாத்தப்படும் நவராத்திரி விழாவானது ஞாயிறு 17-11-2024 அன்று காலை 11 மணியளவில் ஆரம்பமாகி மாலை 3 மணி வரை Marly-le-Roi நகரசபை தந்துள்ள விழா மண்டபத்தில் நடைபெறும்.
[நகரசபை விழா மண்டபத்தினை தந்த திகதியினை பொறுத்தே இவ்விழா நடைபெறுகின்றது]
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்கள் அனைவரையும் இந்நிகழ்வில் பங்குபற்றி சிறப்பிக்குமாறு இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக்கூட நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.
விழா மண்டபத்தின் விலாசம் :
Salle Champ-des-Oiseaux
Rue du Champs des Oiseaux,
Marly-le-Roi 78160
அன்றைய தினம் திரு ஞானசீலன் அவர்களின் வேண்டுகோளிற்கமைய, சமய உணர்வலைகளை ஊக்குவிக்கும் வகையில் போட்டி நடாத்தப்பட்டு வெற்றி பெறுவோரிற்கு 1ஆவது, 2ஆவது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.
பேச்சுப் போட்டியின் தலைப்பு :
« ஆறுமுகநாவலர் »
[அவர்களின் தோற்றம், பணி எனும் விடயம் அடங்கிய 3 நிமிடப் பேச்சு]
பேசும் மாணவர்களிடையே எதிர்பார்க்கப்படும் விடயங்கள் :
1-நேரம் கடைப்பிடித்தல்
2-பேசும் தொனி
3- உச்சரிப்பு
- மனப்பாடம் செய்து பேசுதல் விரும்பத்தக்கது.
- கைகளில் தகவல்கள் வைத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.
இப் போட்டியில் மாதகல் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆனால் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நடுவர்களது தீர்ப்பே இறுதி முடிவு எனவும் அறியத் தருகின்றோம்.
தொடர்பு கொள்ளும் அலைபேசி இலக்கங்கள் : 06-11-05-30-98
வெற்றியடைபவர்களிற்கு பரிசில்களை வழங்குபவர் : வைஸ்ணவி கடை உரிமையாளர் திரு ஞானசீலன் அவர்கள்
இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக் கூடம்
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்
கருத்துகள்
கருத்துரையிடுக