யா| மாதகல் நுணசை வித்தியாலயத்து மாணவன் செல்வன் சாணுஜன் ஜெகதீஸ்வரன், கோட்ட மட்டத்திலும் வலய மட்டத்திலும் ,தனி நடனம் பிரிவு 3 இல் முதலாம் இடத்தைப் பெற்று..!

 2024 இல் நடை பெற்ற தமிழ்மொழிக் கலைத்திறன் போட்டியில் யா | மாதகல் நுணசை வித்தியாலயத்து மாணவன் செல்வன் சாணுஜன் ஜெகதீஸ்வரன், கோட்ட மட்டத்திலும் வலய மட்டத்திலும் ,தனி நடனம் பிரிவு 3 இல் முதலாம் இடத்தைப் பெற்று மாகாண மட்ட த்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். எமது வலிகாம வலயத்திற்கும், பாடசாலைக்கும், கிராமத்திற்கும் பெருமையைச் சேர்த்த இம் மாணவனுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 


அத்துடன் செல்வன் கரிஸ் அபுல்காதி என்ற மாணவன், தனி இசைப்பிரிவில் 02இல் 3வது இடத்தையும்; செல்வி, செல்சியா அன்ரன் ஜோட்ஸ் என்ற  தரம் 11இல் கற்கும் மாணவி ஆங்கில தினத்தில் எழுத்தாக்கத்தில் 3வது இடத்தை பெற்றுக் கொண்ட மை குறிப்பிடத்தக்கது. இம் மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.




எமது பாடசாலை மாணவர்கள் கராத்தே பயிற்சியில் 10KYu தரத்திலிருந்து 9 KYu தரத்திற்கான தரம் தாண்டல் பரீட்சையில் சித்தி எய்திய மாணவரையும் ஆசிரியரையும் பாராட்டி வாழ்த்தி நிற்கின்றோம்.






Show Comments

கருத்துரையிடுக