அமரர். செல்வன் பார்த்தீபன் தேவதாசன் (கண்ணா)

....::05ம் ஆண்டு நினைவஞ்சலி::...

வாழ்க்கை வரலாறு
இலங்கையின் சரவணை, மாதகல் போன்றவற்றை பூர்வீகமாகக் கொண்டதும், ஐரோப்பாவில் வளர்ச்சி அடைந்ததும், அழகிய பாரிசினை தலைநகரமாகக் கொண்ட பிரான்ஸ்ஸில் 28/JUN/1992 இல் திரு.திருமதி தேவதாசன் பவானி தம்பதிகளின் அன்பு மகன் பார்த்தீபன் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் மழலையாக அவதரித்தார்.                                       

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குணாளினி, துர்க்காயினி, அமிர்தினி போன்ற உடன்பிறப்புகளுடன் பசுபதிப்பிள்ளை அமிர்தவல்லி, கிருஸ்ணசாமி மனோன்மணி தம்பதிகளின் மடியில் பேரனாக  குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதுடன் ஜெமிரா, கபித்திரா போன்றவர்களின் மாமனாக சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.                                              

மேலும் கண்ணா என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் இவர் நண்பர்களுடன் தொலைபேசியில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியதுடன் திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார்.                                                                       

இவ்வாறு  உற்றார், உடன்பிறப்புகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12.09.2019 இல் 27 வயதில் பிரான்ஸில் உள்ள Les clayes - Sous - Bois நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

“இளமை உருவே இளம் தென்றலே

முதுமை ஞானம் முழுவதும் கொண்ட......

அருமை உறவே ஆருயிர் மருந்தே

இனிமை மனதுடன் இன்புற்று வாழ்ந்து

பெருமை சேர்த்த பெரு மகனே

பிரிந்து சென்றீரே எமைத் தவிக்கவிட்டு”

பிரான்ஸ் Les Clayes-sous-Bois ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் தேவதாசன் அவர்கள் 12-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, அமிர்தவல்லி(சரவணை) தம்பதிகள், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, மனோன்மணி(மாதகல்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

தேவதாசன்(சரவணை) பவானி(மாதகல்) தம்பதிகளின் அன்பு மகனும்,

குணாளினி(றதி), துர்க்காயினி(துர்க்கா), அமிர்தினி(அம்மு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெமிரா(மிரா), கபித்திரா(கபி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 14 Sep 2019 3:00 PM – 4:00 PMSunday, 15 Sep 2019 4:00 PM – 5:00 PMMonday, 16 Sep 2019 4:00 PM – 5:00 PMWednesday, 18 Sep 2019 3:00 PM – 4:00 PM
1 Boulevard du Général Leclerc
92110 Clichy, Franceகிரியை Get DirectionThursday, 19 Sep 2019 9:00 AM – 11:15 AM
1 Boulevard du Général Leclerc
92110 Clichy, Franceதகனம் Get DirectionThursday, 19 Sep 2019 12:45 PM – 2:15 PM
Père Lachaise Cemetery
8 Boulevard de Ménilmontant, 75020 Paris, France

தொடர்புகளுக்கு
தேவதாசன் – தந்தை



Show Comments

கருத்துரையிடுக