பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 2024ம் ஆண்டிற்குரிய 20ஆவது வருடாந்த ஒன்று கூடல் [பொதுக்கூட்டமும், ஆண்டுவிழாவும்] ஞாயிற்றுக் கிழமை 22-09-2024அன்று காலை 9 மணிக்கு மர்லி லு றுவா (MAIRIE DE MARLY LE ROI) நகரசபைக்கு கீழ் உள்ள மண்டபத்தில் ஆரம்பமாகி மாலை 7மணியளவில் நிறைவடைந்தது..!

20ஆவது ஒன்றுகூடலில் சிறப்பு விருந்தினர்களாக ஜேர்மனி நாட்டில் வசிக்கும் "சமூக சேவகன்" திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களும், சுவிஸ் நாட்டில் வசிக்கும்  "மக்கள் வாழ உதவும் மாதகல் கிளையின் பொறுப்பாளர் திரு வீரவாகு பாலசுப்பிரமணியம்-சுவிஸ் சிவா அவர்களும்,  கௌரவ விருந்தினர்களாக பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு கந்தசாமி சிறிபிரபாகரன்-லண்டன் பிரபா அவர்களும், சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திருமதி பாலமுருகன் சிவாஜினி அவர்களும், பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திருமதி தவபாலன் குமுதினி அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
              
 இந்நிகழ்வில்  கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன், தமிழ் மொழிப் பரீட்சை எடுத்தவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அதிதிறன் எடுத்து சித்தியடைந்தவர்களும், 12ஆம் வகுப்பினை முடித்த மாணவர்களும் விசேட பரிசிலகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அதேவேளை, பிரான்ஸ் நாட்டின் உயர்தராதர வகுப்புப் பரீட்சையில் [BACCALAUREAT] சித்தியடைந்தவர்களிற்கும் விசேட பரிசில்கள் வழங்கி அவர்களின் பெற்றோருடன் கௌரவிக்கப்பட்டனர்.

பிரான்சில் வசிக்கும் மாதகல் மக்கள், மற்றும் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.  
 
இந்த நிகழ்வின் சில பதிவுகள் :












































































































பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 20ஆவது ஒன்றுகூடல் நிகழ்வில்  ஞாயிறு 22-09-2024 அன்று நடந்த பொதுக்கூட்டத்திலும், ஆண்டு விழாவிலும் எமது சங்கத்தினால்  கௌரவிக்கப்பட்டவர்கள் :..!




பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 20ஆவது ஒன்றுகூடல் நிகழ்வில் ஞாயிறு 22-09-2024 அன்று நடந்த பொதுக்கூட்டத்திலும், ஆண்டு விழாவிலும் எமது சங்கத்தினால் சமூக சேவகன் திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.



 

Show Comments

கருத்துரையிடுக