யாழ். மாதகல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், Montreal, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு மகேஸ்வரன் அவர்கள் 14-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற வடிவேலு-அன்னலட்சுமி அவர்களின் அன்புப் புதல்வரும், பொன்னம்பலம்-தவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
சாந்திராணி அவர்களின் அன்புக்கணவரும்,
கோபி, ஆர்த்தி, அம்பி, கௌஸி, ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
நகுலாம்பிகை, கஜேந்திரன், ஜிகனாம்பிகை, மனோகரன், கருணாகரன், குஞ்சிதபாதம், ரஞ்சிதபாதம், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகரன், ரஞ்சினி, ரோஸா, ரஜிதா, ரவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-01-2024ம் திகதி புதன்கிழமை மாலை 4:00 மணிமுதல் 9:00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 18-04-2024ம் திகதி வியாழக்கிழமை காலை 9:00 மணிமுதல் பிற்பகல் 12:00 மணிவரை அவரது இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இடம்:-
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint -Laurent, QC H4N 1J7
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக