Ad Code

Responsive Advertisement

மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன், கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் நிதியுதவியுடன்..!

முன்பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்கான முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் பாடசாலை பௌவுதிக வளத் தேவைக்கான நிதியுதவி

மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன், கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் நிதியுதவியுடன், மாதகல் கிராமத்தில் செயற்படும் மாதகல் புனித தோமையார் முன்பள்ளியில் கல்வி கற்ப்பிக்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவு நிதியாக ரூபா 180000/= வும் யா/மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு நூலக கூரை புணரமைப்பதற்கு ரூபா 200000/= வழங்கி வைக்கும் நிகழ்வு 12.01.2024 ஆம் திகதி காலை 11 மணிக்கு மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகத்தில் உப தலைவர் திரு. தி. ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாதகல் பங்குத் தந்தை அருட்பணி செ.றோய் பேடினன் ,மாதகல் நலன்புரிச் சங்க செயலாளர் திரு.மா.ஜெறாட், மாதகல் நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக யாழ் மாதகல் விக்னேஸ்வரா வித்யாலயா அதிபர், மாதகல் புனித தோமையார் முன்பள்ளி தலைவர் ஆகியோர்களும் மாதகல் கிராமம் சார்ந்த மூன்று கிராம அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தனர். மாதகல் நலன்புரிச் சங்க உப தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் மாதகல் நலமன்புரிச் சங்கத்தின் செயற்பாடுகள் விடயமாகவும் கனடா மாதகல் நலமன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் நிதியுதவிகள் விடயமாகவும் விளக்கமளிக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நிதிகளும் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து நன்றி தெரிவிப்பு மாதகல் நலன்புரிச் சங்க உபசெயலாளர் திரு.யே. அனுஸ்ட தாஸ் என்பவரால் தெரிவிக்கப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement