தாகம் தீர்ந்ததா பேரலையே? உன்னால் தரணி சிந்துதே என்றென்றும் கண்ணீரலையே.
சுனாமி பேரலையின் கோரத்தாண்டவத்தின் 20ஆம் ஆண்டு நினைவலைகள்
26.12.2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட எம் உறவுகளை நெஞ்சமதில் சுமந்து 20ஆம் ஆண்டு நினைவு நாளில்
சுனாமி அலைக்கு ஓர் கண்டன அறிக்கை
தண்ணீரால் கால்கள் நனைக்கும் -நீயன்று
கண்களை நனைத்தாய் கண்ணீரால்.
கல்லுப்பு தந்துதவினாய்-நீயன்று
கடன் கழித்தாய் கண்ணீரில் உப்பைக் கடன் வாங்கி.
ஆதவனை மூழ்கடிக்கும் நீ -ஏன் மூழ்கடித்தாய் எம் உறவுகளை.
"நீ துரோகி எனத் தெரிந்திருந்தால்
எச்சரிக்கையாய் இருந்திருப்போம்". ஒருபோதும் மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது. நண்பனாக உடனிருந்து முதுகில் குத்திய உன் துரோகத்தை...
ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட அனைத்து உயிர்களுக்கும்,உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
26.12.2024 இன்று மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் உயிர்நீத்த அனைத்து உறவுகளையும் நினைவு கூர்ந்து பி.ப 4:30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்...
கருத்துரையிடுக